ADDED : அக் 25, 2026 05:26 PM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் நேற்று (அக்.,24) இரவு முதல் பெய்து வரும் கனமழையால் தட்டாஞ்சாவடி தொகுதியின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று (அக்.,25) ஆய்வு செய்தனர்.
அதில், மழைநீர் வடிகால் வசதிகள் மற்றும் வாய்க்கால்களின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த எம்.எல்.ஏ., மழைநீர் தடையின்றி வெளியேறுவதற்குத் தேவையான அனைத்து பணிகளைத் தாமதமின்றி முடிக்க வேண்டும். மழைநீர் குடியிருப்புப் பகுதிகளில் தேங்காமல் வெளியேறுவதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை அகற்றி, மழைநீர் வடிகால்களைச் சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மழைக்காலங்களில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, தெரிவித்தார்.
