/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பரிவர்த்தனைகள் இல்லாத 8,000 வங்கி கணக்குகள்
/
பரிவர்த்தனைகள் இல்லாத 8,000 வங்கி கணக்குகள்
ADDED : ஜன 28, 2024 05:22 AM
கடந்த 2017ம் ஆண்டில், நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் முழுக்க, முழுக்க டிஜிட்டலில் இயங்கும் போஸ்ட் பேமெண்ட்வங்கி துவங்கப்பட்டது. அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயம் என்பதால் சிறிய கிராமங்களின் அஞ்சல் நிலையங்களில் கூட இந்த வங்கியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது.
இந்த வங்கியில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் துவங்கி, கிராமப்புற கிளை அஞ்சல் நிலையங்கள் வரை மொத்தம் 43 ஆயிரம் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர். இதில், 8,000 வாடிக்கையாளர்களின் கணக்குகள் துவங்கிய நாளில் இருந்து தற்போது வரை எந்த பரிவர்த்தனைகளும் இல்லாமல் செயல்படாத கணக்காக உள்ளது.
இதிலும், 5,000 கணக்குகள் ஐூரோ பேலன்சில் உள்ளது. மீதி 3,000 கணக்குகளில் மொத்தமாக ரூ.7 லட்சம் வரை பணம் இருப்பில் இருக்கிறது. இந்த வங்கி மூலமாக மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் திட்ட நிதியுதவிகள் வழங்கப்படுவதால், கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் செயல்படாத கணக்குகளில் பரிவர்த்தனையை துவக்க வேண்டும், தங்களுக்கு மத்திய, மாநில மானியங்கள், நிதிப்பயன்கள் வந்துள்ளதாஎன்பதை தெரிந்து கொண்டு பயன் பெறலாம் என, போஸ்ட் பேமெண்ட் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.