/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
6 பேரிடம் ரூ.88 ஆயிரம் மோசடி மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
/
6 பேரிடம் ரூ.88 ஆயிரம் மோசடி மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
6 பேரிடம் ரூ.88 ஆயிரம் மோசடி மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
6 பேரிடம் ரூ.88 ஆயிரம் மோசடி மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
ADDED : டிச 17, 2024 05:16 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 6 பேரிடம், 88 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த மர்ம கும்பலை, சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.
அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ஜெயகுமார், இவர், பிளாஷ் வால்ட் என்ற செயலி மூலம் கடன் வாங்கினார். அந்த கடனை, வட்டியுடன் திருப்பி செலுத்தியுள்ளார். இவரை தொடர்பு கொண்ட நபர், வாங்கிய கடனுக்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டும். இல்லை எனில், புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிடுவதாக மிரட்டினார். அதற்கு பயந்து, 25 ஆயிரம் ரூபாயை அனுப்பி, மர்ம நபரிடம் ஏமாந்தார்.
மடுகரையை சேர்ந்தவர் லட்சுமணநாராயணன்.
இவர் ஆன்லைன் மூலம் 14 ஆயிரத்து 600 ரூபாய், அனுப்பி பைக் முன்பதிவு செய்தார். பின்னர் அதில் இருந்த எண்ணை, தொடர்பு கொண்ட போது, எந்த பதிலும் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.
வாண்ரப்பேட்டையை சேர்ந்தவர் நாயகம், இவரது மொபைலுக்கு, கே.ஒ.சி., புதுப்பிக்க வேண்டும் என மெசெஜ் வந்தது. அதையடுத்து, அவர் வங்கி விபரங்களை பதிவு செய்து, புதுப்பித்தார்.
அதன் பிறகு அவரது வங்கி கணக்கில் இருந்து 34 ஆயிரத்து 600 எடுக்கப்பட்டது.
அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் 8 ஆயிரம், புதுச்சேரியை சேர்ந்த செந்தில் ரூ.2,800; சரவணன் ரூ.3,000 அனுப்பி மர்ம நபர்களிடம் ஏமாந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர்கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி செய்யும் கும்பலை தேடிவருகின்றனர்.