sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்டசபையை முற்றுகையிட்ட வாரிசுதாரர்கள் 89 பேர் கைது

 சட்டசபையை முற்றுகையிட்ட வாரிசுதாரர்கள் 89 பேர் கைது

 சட்டசபையை முற்றுகையிட்ட வாரிசுதாரர்கள் 89 பேர் கைது


ADDED : பிப் 11, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 04:35 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சட்டசபையை முற்றுகையிட்ட நகராட்சி வாரிசுதாரர்கள் 89 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, நகராட்சி வாரிசுதாரர்கள் 123 பேர் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என, வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க வேண்டும் என, வலியுறுத்தி நேற்று உள்ளாட்சித் துறை அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக சட்டசபை நோக்கி சென்றனர்.

ஊர்வலத்திற்கு வாரிசுதாரர்கள் நலச்சங்க நிர்வாகி சத்தியன் தலைமை தாங்கினார். பிரபு முன்னிலை வகித்தார். ஊர்வலம் சுய்ப்ரேன் வீதி வழியாக சட்டசபை நோக்கி வந்த அவர்களை யூகோ வங்கி அருகே தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.

போராட்டக்காரர்கள் தடுப்புகளின் மீது ஏறி, சட்டசபை நோக்கி செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின், வாரிசுதாரர்கள் 123 பேருக்கும்பணி வழங்க வேண்டும் என வலியுத்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, தடையை மீறி செல்ல முயன்ற 32 பெண்கள் உட்பட 89 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் மாலை அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சட்டசபை நோக்கி வந்தனர். தொடர்ந்து, சட்டசபை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் எஸ்.பி., சுருதி, பேச்சு வார்த்தை நடத்தினார். இதனைதொடர்ந்து, நாளை (இன்று) அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us