தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 9 பேர் ஊர் திரும்பினர்

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 9 பேர் ஊர் திரும்பினர்

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 9 பேர் ஊர் திரும்பினர்


ADDED : பிப் 08, 2025 09:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 09:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு விசை படகில் சென்றனர்.

இவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கடந்த 9ம் தேதி கைது செய்தனர். மீனவர்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம், படகை இயக்கிய மீனவர் அன்பழகனுக்கு ரூ.40லட்சம் அபராதம் ஆறுமாதம் சிறை தண்டனை விதித்து, மற்ற 9 மீனவர்களை விடுவித்து உத்தரவிட்டது.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் சென்னைக்கு வந்தடைந்தனர்.

இவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை காரைக்காலுக்கு அழைத்து வந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us