/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளஸ் 2 தேர்வில் புதுச்சேரி, காரைக்காலில்.... 92.41 சதவீதம் தேர்ச்சி
/
பிளஸ் 2 தேர்வில் புதுச்சேரி, காரைக்காலில்.... 92.41 சதவீதம் தேர்ச்சி
பிளஸ் 2 தேர்வில் புதுச்சேரி, காரைக்காலில்.... 92.41 சதவீதம் தேர்ச்சி
பிளஸ் 2 தேர்வில் புதுச்சேரி, காரைக்காலில்.... 92.41 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 07, 2024 04:35 AM

புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 14,012 மாணவர்களில்,12,948 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்தாண்டை விட 0.27 சதவீதம் தேர்ச்சி சரிந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வினை புதுச்சேரி, காரைக்கால் பகுதியை சேர்ந்த 6,566 மாணவர்கள், 7,446 மாணவிகள் என மொத்தம் 14,012 பேர் எழுதினர்.
இதில் 5,867 மாணவர்கள்; 7,081 மாணவிகள் என மொத்தம் 12,948 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி 89.35 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி 95.10 சதவீதமாகவும் உள்ளது. மொத்த தேர்ச்சி சதவீதம் 92.41 ஆகும்.
சிறிய சறுக்கல்
கடந்த 2023ம் ஆண்டின் புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகள் 92.68 சதவீத தேர்ச்சி பெற்ற சூழ்நிலையில், இந்தாண்டு 0.27 சதவீதம் தேர்ச்சி சரிந்துள்ளது.
அரசு பள்ளிகள்
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகளை பொருத்தவரை 2,570 மாணவர்கள்; 3,531 மாணவிகள் என மொத்தம் 6,101 பேர் எழுதினர். இதில் மாணவர்கள் 2,002, மாணவிகள் 3,205 என மொத்தம் 5,207 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 85.35 ஆகும்.
கடந்தாண்டு அரசு பள்ளிகள் 85.40 சதவீத தேர்ச்சியை கொடுத்திருந்த சூழ்நிலையில் 0.05 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.
தனியார் பள்ளிகள்
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகளில் இருந்து 3,996 மாணவர்கள், 3,915 மாணவிகள் என மொத்தம் 7,911 பேர் எழுதினர். இதில் 3,865 மாணவர்கள்,3,876 மாணவிகள் என மொத்தம் 7,741 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.85. இதுகடந்தாண்டைவிட 0.96 சதவீதம் குறைவாகும்.
புதுச்சேரி பிராந்தியம்
புதுச்சேரி பிராந்தியத்தில் மாணவர்கள் 5,680, மாணவிகள் 6,181 பேர் என மொத்தம் 11,861 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 5,143, மாணவிகள் 5,933 என மொத்தம் 11,076 தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 4,755 மாணவர்களில் 4108 பேரும், தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7,106 மாணவர்களில் 6,968 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் 86.39; தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 98.06 ஆகும். ஒட்டுமொத்தமாக புதுச்சேரி பிராந்தியத்தில் 93.38 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகள் இந்தாண்டு 0.49 சதவீதம் கூடுதல் தேர்ச்சியை அளித்துள்ளன. அதேவேளையில் தனியார் பள்ளிகள் கடந்தாண்டைவிட 0.86 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.
காரைக்கால் பிராந்தியம்
காரைக்கால் பிராந்தியத்தில் மாணவர்கள் 886, மாணவிகள் 1265 என மொத்தம் 2,151 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் மாணவர்கள் 724, மாணவிகள் 1148 என மொத்தம் 1,872 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 1346 பேரில் 1099 பேரும், தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 805 பேரில் 773 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகள் தேர்ச்சி 81.65 சதவீதம், தனியார் பள்ளிகளின் தேர்ச்சி 96.02 சதவீதம் என ஒட்டுமொத்தமாக 87.03 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டின் 83.66 சதவீத தேர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு 2.01 சதவீதம் சரிந்துள்ளது.
இதேபோல் தனியார் பள்ளிகள், கடந்த ஆண்டின் 97.81 சதவீத தேர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு 1.79 சதவீதம் குறைந்துள்ளது.