/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கோவிலில் 9ம் ஆண்டு கும்பாபிேஷக விழா
/
மணக்குள விநாயகர் கோவிலில் 9ம் ஆண்டு கும்பாபிேஷக விழா
மணக்குள விநாயகர் கோவிலில் 9ம் ஆண்டு கும்பாபிேஷக விழா
மணக்குள விநாயகர் கோவிலில் 9ம் ஆண்டு கும்பாபிேஷக விழா
ADDED : மார் 17, 2024 05:25 AM
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிேஷக 9ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 21ம் தேதி காலை, கணபதி ேஹாமத்துடன் விழா துவங்குகிறது. மறுநாள் 22ம் தேதி காலை, 27 கன்றுகளுடன் கோமாதா பூஜை நடக்கிறது. 23ம் தேதி காலை 7:30 மணி முதல், இரவு 10:30 மணி வரை, முதன்முறையாக ஏகதின லட்சார்ச்சனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 24ம் தேதியன்று, விக்னேஸ்வர பூஜையும், யாகசாலை பூஜையும் துவங்குகிறது. 25ம் தேதியன்று, மணக்குள விநாயகர் மூலவருக்கு கலசாபிேஷகமும், 1,008 சங்காபிேஷகமும் செய்யப்படுகிறது. உற்சவருக்கு 108 சங்காபிேஷகம், மாலையில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
கும்பாபிேஷக ஆண்டு விழாவை முன்னிட்டு, தினமும் மாலையில் இசை, நாட்டியம், சிறப்பு நாதஸ்வரக் கச்சேரி ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன், அர்ச்சகர்கள் கணேஷ் சிவாச்சாரியார், சீனுவாச குருக்கள், நாகராஜன் சிவாச்சாரியார் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

