/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து
/
சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து
ADDED : செப் 20, 2024 03:28 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் சென்ற கார் இந்திரா சிக்னல் அருகே சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
விழுப்புரம் பகுதியை சேர்ந்த 7 பேர் கொண்ட குடும்பத்தினர் டி.என்.22 டி.ஏ. 4992 என்ற பதிவெண் கொண்ட காரில் புதுச்சேரி நகரப் பகுதியில் நடந்த திருமண விழாவிற்கு வந்தனர்.
நேற்று இரவு 9:00 மணி அளவில் மீண்டும் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் புறப்பட்டனர். இந்திரா சிக்னல் அருகே நடேசன் நகர் சாலை சந்திப்பு பகுதியில், எதிரே வந்த பைக் மீது மோதாமல் இருக்க, டிரைவர் காரை திரும்பினார்.
இதில், கட்டுபாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பக்க பகுதி சேதமடைந்தது. இருப்பினும், காரில் பயணம் செய்த யாருக்கும் காயம் எற்படவில்லை. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.