/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
/
பெண்ணை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
ADDED : செப் 25, 2024 03:20 AM
திருக்கனுார் : பெண்ணை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
திருக்கனுார் அடுத்த கொடாத்துார் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்பு, 62; வீட்டின் எதிரே பெட்டிக்கடை வைத்துள்ளார்.
இவரது பெட்டிக்கடைக்கு வரும் இளைஞர்கள் அதிக நேரம் அங்கேயே அமர்ந்திருப்பதால், பல்வேறு பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், அதேப்பகுதியை சேர்ந்த கனகராஜ், 40; நேற்று முன்தினம் குப்புவிடம் கடைக்கு வருபவர்கள் ஏன் அதிக நேரம் அமர்ந்து உள்ளனர் என கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கோபமடைந்த கனகராஜ், குப்புவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.
புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.