தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இடத்தில் ரகளை 17 பேர் மீது வழக்கு

இடத்தில் ரகளை 17 பேர் மீது வழக்கு

இடத்தில் ரகளை 17 பேர் மீது வழக்கு


ADDED : அக் 30, 2026 08:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2026 08:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: டி. நகர் போலீசார் கோரிமேடு போக்குவரத்து முனையம் பகுதியில் நேற்று (அக்.,29) ரோந்து சென்றனர். அப்பகுதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வில்லியனுார் சம்பத்,26; முதலியார்பேட்டை சந்துரு,22; விக்கிரவாண்டி, அன்னியூர் துரை,36; அருண்குமார்,36; கோரிமேடு, ராஜா,42; திலாஸ்பேட்டை விஜய்,27; சாரம் கார்த்திகேயன்,43; முத்தியால்பேட்டை புகழேந்தி சாரதி,27; மூலகுளம் ஜான்பால், 32; லாஸ்பேட்டை சரவணன், 47 ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர்.

லாஸ்பேட்டை போலீசார் நேற்று இ.சி.ஆர்., ஜெயராம் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட, சாமிபிள்ளை தோட்டம் தேவா,29; என்பவர் மீது வழக்குப் பதிந்தனர்.

சேதராப்பட்டு போலீசார் நேற்று பல்வேறு பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். சேதராப்பட்டு பிப்டிக் தொழிற்பேட்டை பகுதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட செஞ்சி வீரப்பன்,44; சந்தைபுதுக்குப்பம் முத்தையன், 35; ஆகியோர் மீது வழக்குப்பதிந்தனர்.

மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மேட்டுபாளையம் ஐ.டி.ஐ., ரோடு பகுதியில் குடிபோதையில் அநாகரிமாக நடந்து கொண்ட சண்முகாபுரம் சேகர்,49; குண்டுசாலை பகுதியில் முத்திரைபாளையம் சோலைராஜன்,41; ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர்.

பள்ளூர் போலீசார் நேற்று மெயின் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு குடிபோதையில் ரகளை செய்த கேரளம் தலசேரி பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் வண்ணத்தாங்கன்டி, 49; பந்தக்கல் பிரேம் சந்த்,67; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us