/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் நிலம் குத்தகை எடுத்தவரை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு பதிவு
/
கோவில் நிலம் குத்தகை எடுத்தவரை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு பதிவு
கோவில் நிலம் குத்தகை எடுத்தவரை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு பதிவு
கோவில் நிலம் குத்தகை எடுத்தவரை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : செப் 22, 2024 02:01 AM
புதுச்சேரி: கருவடிக்குப்பம் இ.சி.ஆரில் கருமுத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 15 ஆயிரம் சதுரடி நிலம் குத்தகைக்கு எடுத்தவரை மிரட்டிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
கருவடிக்குப்பம் கருமுத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான கோவில் நிலம், இ.சி.ஆர்., கே.பி.எஸ்.,மகால் எதிரில் 15 ஆயிரம்சதுரடியில் உள்ளது.
இதனை முத்தியால்பேட்டை, சோலை நகர், குறிஞ்சி வீதியைச் சேர்ந்த சந்துருஜி, 35, என்பவர்,கோவில் அறங்காவலர் குழு மூலம் ரூ.3 லட்சம் முன் தொகை, மாதம் ரூ.46 ஆயிரம் வாடகை என பேசி ஏலம் எடுத்தார்.
சந்துருஜி இ.சி.ஆரில் உள்ள கோவில் நிலத்தை சுத்தம் செய்து அங்கிருந்த மரம் ஒன்றை வெட்டினார்.
அங்கு வந்த கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த எழில், மதி மற்றும் 6 பேர், யாருக்கும் தெரியாமல் எப்படி கோவில் நிலம் ஏலம் விடப்பட்டது.
கோவில் நிலத்தில் உள்ள மரத்தை ஏன் வெட்டினீர்கள் என கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மரம் வெட்டியது தொடர்பாக சந்துருஜி மீது வனத்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
அதுபோல், சந்துருஜி தன்னை தாக்கி மிரட்டியதாக லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் அன்சர்பாஷா தலைமையிலான போலீசார் கருவ டிக்குப்பத்தைச் சேர்ந்த மதி, எழில் ஆகியோர் மீதுமிரட்டல் மற்றும் ஆபாசமாக திட்டுதல் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.