/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மொபைல் விற்பனையாளரை காரில் கடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு
/
மொபைல் விற்பனையாளரை காரில் கடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு
மொபைல் விற்பனையாளரை காரில் கடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு
மொபைல் விற்பனையாளரை காரில் கடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : அக் 26, 2024 05:48 AM
புதுச்சேரி: மூலக்குளத்தில் மொபைல் விற்பனை கடைக்காரரை காரில் கடத்தி தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி, மூலக்குளம் வில்லியனுார் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தில்லை கணேஷ், 35; மொபைல் பழுது நீக்குதல் மற்றும் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவருக்கு, காயத்ரி என்ற மனைவியும், ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 10ம் தேதி தில்லை கணேஷ் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த ரெட்டிச்சாவடியை சேர்ந்த சிவக்குமார், விக்கிரவாண்டியை சேர்ந்த கைப்புள்ள ராஜா மற்றும் 2 பேர், தில்லை கணேஷிடம், முன்விரோதம் காரணமாக தகராறில் ஈடுபட்டு, அவரை அடித்து காரில் ஏற்றியுள்ளனர்.
பின்னர், காருக்குள் வைத்து தில்லை கணே ைஷ அடித்து உதைத்தப்படி காரிலேயே நகரப்பகுதியை சுற்றி வந்து, நீண்ட நேரத்திற்கு பிறகு மீண்டும் கடையின் முன் காரில் இருந்து இறக்கி விட்டு, இதுபற்றி யாரிடமும் தெரிவித்தால், கொலை செய்து விடுவோம் என மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து தில்லை கணேஷ் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.