/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்குப் பதிவு
/
பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்குப் பதிவு
பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்குப் பதிவு
பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்குப் பதிவு
ADDED : டிச 13, 2024 06:18 AM
புதுச்சேரி: டிரேடிங் நிறுவனம் நடத்துவதாக கூறி, பெண்ணிடம் 11 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த பெருமாள்புரத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் மனைவி குணாவதி. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் அவரது மனைவி ேஹமா இருவரும், சேர்ந்து, டிரேடிங் அகாடமி நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில், முதலீடு செய்தால், அதிக லாபம் பெறலாம் என கூறினர்.
அதை நம்பி, அவர், கடந்த 2021ம் ஆண்டு, 11 லட்சம் ரூபாயை, முதலீடு செய்தார். சில மாதங்கள் மட்டுமே, முதலீடு செய்த பணத்திற்கு லாபம் தொகை கொடுத்தனர். அதன் பின்னர், கொடுக்காமல் காலம் தாழ்த்தி வேறு காரணங்களை கூறி வந்தனர். முதலீடு செய்த பணம் மற்றும் லாபத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததை அடுத்து, குணாவதி, வில்லியனுார் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார், ரங்கநாதன் அவரது மனைவி ஹேமா மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.