UPDATED : அக் 09, 2026 06:09 PM
ADDED : அக் 09, 2026 06:07 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பெரிய காலாப்பட்டு, பூங்காவன செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் அடியபாதம், 73. இவருக்கு சொந்தளமான இடம் அதே பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் வீதியில் அமைந்துள்ளது.
அந்த இடத்தின் பக்கத்து இடத்தில் சிவராமன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். சிவராமன் வீட்டின் கட்டுமான பணியின்போது, அடியபாதத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்த பழமையான ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பெரிய பூவரசன் மரத்தை ஆட்களை வைத்து வெட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து அடியபாதம் அளித்த புகாரின் பேரில், சிவராமன் மீது காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
