UPDATED : அக் 09, 2026 06:09 PM
ADDED : அக் 09, 2026 06:07 PM
புதுச்சேரி: தமிழக அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம், தர்மநல்லுாரைச் சேர்ந்தவர் லோகநாதன், 53; தமிழக அரசு பஸ்சில் கண்டக்டராக பணிபுரிகிறார்.
இவர் கடந்த 11ம் தேதி கடலுாரியில் இருந்து சென்னை சென்ற அரசு பஸ்சில் பணியில் இருந்தபோது, புதுச்சேரி முருகா தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் வசந்தகுமார், 22; என்பவர் பஸ்சில் ஏறினார்.
அவரிடம் கண்டக்டர் லோகநாதன் டிக்கெட் எடுக்குமாறு கூறியபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வசந்தகுமார், லோகநாதனை தாக்கி, அவரிடமிருந்த டிக்கெட் வழங்கும் இயந்திரத்தையும் உடைத்து சேதப்படுத்தினார்.
லோகநாதன் புகாரின் பேரில், மரக்காணத்தை சேர்ந்த வசந்தகுமார் மீது டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
