UPDATED : நவ 04, 2026 12:02 PM
ADDED : நவ 04, 2026 11:58 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: குடிபோதையில் பொது இடத்தில் ரகளை செய்த மூன்று பேர் மீது டி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
டி நகர் போலீசார் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டியில் குடிபோதையில் பொது இடத்தில் ரகளை செய்த, வினோபா நகர் ஜான்ராஜ்,37; என்பவர் மீது வழக்குப் பதிந்தனர். அதேபோல், கோரிமேடு டிரெக் டெர்மினல் பகுதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட திருசிற்றம்பலம் கூட்ரோடு பகுதியை சேர்ந்த வீரசங்கர்,45; சண்முகாபுரம் சம்பத்குமார்,47; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
