/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்ட விரோதமாக பேனர் அச்சிட்டு கொடுத்த பிரிண்டிங் கடை மீதும் வழக்கு பதிய வேண்டும்
/
சட்ட விரோதமாக பேனர் அச்சிட்டு கொடுத்த பிரிண்டிங் கடை மீதும் வழக்கு பதிய வேண்டும்
சட்ட விரோதமாக பேனர் அச்சிட்டு கொடுத்த பிரிண்டிங் கடை மீதும் வழக்கு பதிய வேண்டும்
சட்ட விரோதமாக பேனர் அச்சிட்டு கொடுத்த பிரிண்டிங் கடை மீதும் வழக்கு பதிய வேண்டும்
ADDED : செப் 20, 2024 03:36 AM
புதுச்சேரி: இ.சி.ஆரில் கல்யாண கோஷ்டிகளுக்கு சட்ட விரோதமாக பேனர்களை அச்சடித்து கொடுத்த பிரிண்டிங் கடைகள் உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
லாஸ்பேட்டை இ.சி.ஆர்., மடுவுபேட் முதல் கொக்குபார்க் வரை, சாலை சென்டர் மீடியனில் திருமண வரவேற்பு பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு உதவி பொறியாளர் ஜெயராஜ் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், லாஸ்பேட்டை போலீசார் பேனர் வைத்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது புதுச்சேரி நகர திறந்தவெளி அழகு சீர்கெடுக்கும் பிரிவு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்கு பதிந்தனர்.
ஆனால் சட்ட விரோத பேனர்களை அச்சடித்து கொடுத்த பிரிண்டிங் கடை கள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
பேனர்கள் அச்சடிக்கும் போது, அதன் கீழ்ப்பகுதியில் பேனர் அனுமதி அளிக்கப்பட்ட நாள், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அனுமதி எண், அனுமதி அளிக்கப்பட்ட அளவின் விவரம் மற்றும் அனுமதி வழங்கப்பட்ட கால அவகாசம், பேனர் தயார் செய்த கடையின் பெயர் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும்.
ஆனால், கல்யாண கோஷ்டிகள் வைத்த பேனர்களில் ஏதும் அச்சடிக்கப்படவில்லை. தெரிந்தே இந்த பேனர்களை சட்ட விரோதமாக அச்சடித்து கொடுத்துள்ளனர். இந்த சட்ட விரோத பேனர்களை அச்சடித்து கொடுத்த பிரிண்டிங் கடை உரிமையாளர்கள் மீதும் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.