/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீராம்பட்டினத்தில் பரபரப்புடன் நடந்த பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை
/
வீராம்பட்டினத்தில் பரபரப்புடன் நடந்த பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை
வீராம்பட்டினத்தில் பரபரப்புடன் நடந்த பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை
வீராம்பட்டினத்தில் பரபரப்புடன் நடந்த பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை
ADDED : நவ 06, 2024 05:38 AM

அரியாங்குப்பம் : வீராம்பட்டினத்தில் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
கடந்த 2004ம் ஆண்டு, டிசம்பர் 26ம் தேதி சுனாமி தாக்கியது. இந்தியா, இந்தோனேஷியா உட்பட 14க்கும் மேற்பட்ட நாடுகளில் பல லட்சம் பேர் உயிரிழந்தனர்.
இது போன்று பேரிடர் காலத்தில் பொதுமக்களை காப்பது குறித்த பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மை துறை சார்பில், வீராம்பட்டினத்தில், சுனாமி பாதுகாப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று நடத்தியது.
சப் கலெக்டர் இஷிதா ரதி தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். பாஸ்கர் எம்.எல்.ஏ., தாசில்தார் பிரிதீவ் முன்னிலை வகித்தார்.
சுனாமி பாதுகாப்பு ஒத்திகை
சுமத்ரா தீவில், பூகம்பம் ஏற்பட்டதாக, வந்த தகவலை தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம், நேற்று காலை 9:30 மணிக்கு வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு மைக் மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
அதனையடுத்து, பொதுமக்கள், வீட்டை விட்டு, 300 மீட்டர் தொலைவில் உள்ள பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
முன்னதாக, பொதுமக்களை பாதுகாப்பான மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவது போல ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மேலும், கடல், அலையில் சிக்கி காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு, தற்காலிகமாக மருத்துவ முகாமிற்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த ஒத்திகையில், சுனாமி பற்றி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில், கடலோர காவல் படை எஸ்.பி., பழனிவேல், தெற்கு எஸ்.பி., பக்தவச்சலம், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சயத்து ஆணையர் ரமேஷ், வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், ஊழியர்கள், வீராம்பட்டினம், கிராம பஞ்சாயத்து முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.