sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கவர்னர் மாளிகையில் இரவு முழுதும் துாக்கம் போதை வாலிபரால் புதுச்சேரியில் பரபரப்பு

/

 கவர்னர் மாளிகையில் இரவு முழுதும் துாக்கம் போதை வாலிபரால் புதுச்சேரியில் பரபரப்பு

 கவர்னர் மாளிகையில் இரவு முழுதும் துாக்கம் போதை வாலிபரால் புதுச்சேரியில் பரபரப்பு

 கவர்னர் மாளிகையில் இரவு முழுதும் துாக்கம் போதை வாலிபரால் புதுச்சேரியில் பரபரப்பு


ADDED : மார் 11, 2026 06:38 AM

Google News

ADDED : மார் 11, 2026 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியின் உச்சபட்ச பாதுகாப்பு பகுதியான கவர்னர் மாளிகையில், 'போதை' வாலிபர், சர்வ சாதாரணமாக கேட் ஏறி குதித்து, உள்ளே நுழைந்து, 'ஏசி' அறையில், இரவு முழுதும் துாங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி, சட்டசபை அருகில், கவர்னர் மாளிகையான லோக் நிவாஸ் இயங்கியது.

இந்த கட்டடம் பழுதடைந்த காரணத்தால், கவர்னர் மாளிகையை, கடற்கரை சாலையில் உள்ள பழைய சாராய ஆலை வளாகத்தில், புதிதாக கட்டப்பட்ட கலாசார மைய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.

இதில், கவர்னர் கைலாஷ்நாதன், தன் குடும்பத்துடன் தங்கிஉள்ளார்.

இப்பகுதியில், 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார், சுழற்சி முறையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதல்வர், அமைச்சர்கள், அரசு செயலர்கள் உள்ளிட்டவர்களே முன் அனுமதி பெற்றே உள்ளே செல்ல முடியும்.

இந்நிலையில், கவர்னர் மாளிகையில், நேற்று காலை, கவர்னரின் மகன், முதல் தளத்தில் நடந்து சென்றபோது, அங்கிருந்த ஏசி படுக்கையறையில் வாலிபர் ஒருவர் துாங்குவதை கண்டு திடுக்கிட்டார்.

பாது காப்பு பணியில் இருந்த போலீசார், அந்த மர்ம நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹர்திக் ஷா, 20; பெங்கரூருவில் இருந்து, விபத்து வழக்கு விசாரணைக்காக, புதுச்சேரி வந்தவர், நேற்று முன்தினம் இரவு, மது அருந்தியுள்ளார் .

போதை தலைக் கேறிய நிலையில், கவர்னர் மாளிகையின், இரண்டாவது இரும்பு கேட்டில் ஏறி குதித்து, உள்ளே சென்று, ஏசி அறையில் படுத்து துாங்கியது தெரிந்தது.

இதையடுத்து, ஹர்திக் ஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us