/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொள்முதல் நிலையத்தில் தகராறு பெண்ணாடத்தில் பரபரப்பு
/
கொள்முதல் நிலையத்தில் தகராறு பெண்ணாடத்தில் பரபரப்பு
கொள்முதல் நிலையத்தில் தகராறு பெண்ணாடத்தில் பரபரப்பு
கொள்முதல் நிலையத்தில் தகராறு பெண்ணாடத்தில் பரபரப்பு
ADDED : ஜன 26, 2025 05:41 AM

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே கொள்முதல் நிலையம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்ணாடம் அடுத்த அரியராவியில் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், நேற்று முன்தினம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. நேற்று காலை பட்டியல் எழுத்தர் கலையரசன் தலைமையில் நெல் கொள்முதல் பணி துவங்கியது. அப்பணியை அதே ஊரை சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தினர்.
''நாங்கள் தான் கொள்முதல் நிலையம் துவக்க கலெக்டரிடம் மனு கொடுத்தோம். நாங்கள் தான் கொள்முதல் நிலையத்தை நடத்துவோம்'' என, பட்டியல் எழுத்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கொள்முதல் பணி பாதித்தது.
தகவலறிந்து பகல் 1:00 மணியளவில் வந்த பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் போலீசார், அரசு நடத்தும் கொள்முதல் நிலையத்தில் யாரும் தலையிடக்கூடாது என எச்சரித்தனர். அதையடுத்து, விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

