/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெயிண்டருக்கு கத்தி வெட்டு மூன்று பேருக்கு வலை
/
பெயிண்டருக்கு கத்தி வெட்டு மூன்று பேருக்கு வலை
ADDED : மார் 18, 2024 05:39 AM
புதுச்சேரி : மேட்டுப்பாளையத்தில் பெயிண்டரை கத்தியால் 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
மேட்டுப்பாளையம் சண்முகாபுரம், அண்ணா வீதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (எ) லாசர், 29; பெயிண்டர். இவரது வீட்டின் அருகில் வசிக்கும் கோவிந்தசாலை தர்மபிரகாஷ் தனது பைக்கை பிரான்சிஸ் வீட்டின் முன்பு நிறுத்தினார்.
பைக்கை இங்கு நிறுத்த வேண்டாம் என பிரான்சிஸ் தெரிவித்தார்.
இருந்தும் கடந்த 15ம் தேதி இரவு பிரான்சிஸ் வீட்டின் முன்பு தர்மபிரகாஷ் பைக்கை நிறுத்தினார். இதில் ஆத்திரமடைந்த பிரான்சிஸ், தர்மபிரகாஷின் பைக்கை அடித்து உடைத்தார். இதை அறிந்த தர்மபிரகாஷ் தனது நண்பர்கள் சாரணப்பேட்டை சரவணன், அணைக்கரை வீதி கார்த்திக் ஆகியோர் பிரான்சிஸிடம் சென்று தர்மபிரகாஷ் வைத்திருந்த கத்தியால் பிரான்சிஸ் தலையில் வெட்டினார்.
இதில் படுகாயமடைந்த தர்மபிரகாஷ் கதிர்காமம் மருத்துவமனையில் சேர்த்து பின் ஜிப்மரில் சேர்க்கப்பட்டார்.
பிரான்சிஸ் புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் தர்மபிரகாஷ், சரவணன், கார்த்திக் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

