தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓடும் கார் திடீரென தீப்பிடித்தது: உளுந்துார்பேட்டையில் பரபரப்பு

ஓடும் கார் திடீரென தீப்பிடித்தது: உளுந்துார்பேட்டையில் பரபரப்பு

ஓடும் கார் திடீரென தீப்பிடித்தது: உளுந்துார்பேட்டையில் பரபரப்பு


UPDATED : ஜூன் 07, 2026 11:24 PM

ADDED : ஜூன் 07, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2026 11:24 PM ADDED : ஜூன் 07, 2026 11:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த ஆவட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகன் ராஜேஷ், 26; சென்னையில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், வேப்பூரில் நடந்த உறவினர் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க தாய் ராஜதாரணி, உறவினர் பன்னீர்செல்வம் ஆகியோருடன் நிசான் காரில் (டிஎன்04- ஏஎம்2122 ) சென்றார்.

மாலை 4:10 மணியளவில், உளுந்துார்பேட்டை அடுத்த எறஞ்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, காரின் முன் பகுதி புகையுடன் தீப்பிடித்து எரிய துவங்கியது. உடன் காரில் இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கி உயிர்த்தப்பினர். அதற்குள் கார் தீப்பிடித்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

தகவல் அறிந்த உளுந்துார்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அருகே சாலையில் ஓடும்போது கார் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us