ADDED : ஜூன் 07, 2026 11:31 PM

பாகூர்: காட்டுக்குப்பத்தில் பள்ளத்தில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள், பொது மக்கள் உதவியுடன் மீட்டனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுக்குப்பம், வாக்கால் ஓடை பகுதியில் ஏராளானோர் கறவை மாடுகள் வளர்த்து வருகின்றனர். அந்த கால்நடைகள், காட்டுக்குப்பம் தொழிற்பேட்டை அருகே புதுச்சேரி – சாலையை கடந்து, காட்டுகுப்பம் ஏரிக்கரை பகுதியில் மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன், காட்டுகுப்பம் தொழிற்பேட்டைக்கு எதிரே கால்நடைகள் சாலையை கடக்கும் பகுதியில், தொலை தொடர்பு நிறுவனம் மூலமாக பெரிய பள்ளங்கள் எடுத்து தொலைத் தொடர்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அந்த பள்ளம் மூடப்படாமல் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை மேய்ச்சலுக்கு சென்ற வீடு திரும்பிய, வார்க்கால் ஓடை கிராமத்தை சேர்ந்த வீரப்பன், என்பவரது பசு மாடு ஒன்று, அந்த பள்ளத்தில் விழுந்த எழ முடியாமல் சிக்கி கொண்டது.
தகவலறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, பொது மக்கள் உதவியுடன், மாட்டை பத்திரமாக மீட்டனர். மீண்டும் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க அந்த பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
