போத்தீஸ் துணிக்கடையில் தானியங்கி கார் நிறுத்த வசதி
போத்தீஸ் துணிக்கடையில் தானியங்கி கார் நிறுத்த வசதி
ADDED : ஜூன் 08, 2026 03:46 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி போத்தீஸ் துணிக்கடையில் கார் பார்க்கிங் வசதி திறப்பு விழா நேற்று நடந்தது.
புதுச்சேரியில் போத்தீஸ் துணிக்கடை இயங்கி வருகிறது.
துணிக்கடை துவங்கி 15ம் ஆண்டு விழாவையொட்டி, வாடிக்கையாளர்களின் வசதிக்காக முற்றிலும் புதுமையாக தானியங்கி முறையில் செயல்படும் பல அடுக்கு கார் நிறுத்துமிடம் வசதி ஏற்படுத்தப்பட்டு, திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு, போத்தீஸ் நிர்வாக இயக்குனர் வருண்ரமேஷ், நவீன அடுக்குமாடி தானியங்கி வசதியை திறந்து வைத்தார்.
இந்த நவீன கார் பார்க்கிங் அமைப்பில் 70க்கும் மேற்பட்ட கார்கள் பாதுகாப்பாக நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நகரின் மையப்பகுதியில் வாடிக்கையாளர்கள் எளிதாகவும் விரைவாகவும் வாகனங்களை நிறுத்தும் வசதி கிடைக்கும் என, நிர்வாகம் தெரிவித்துள்ளது.
