/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய வெளியிறவுத்துறை அமைச்சகம் கவர்னர் கைலாஷ்நாதனுக்கு பதில் கடிதம்
/
மத்திய வெளியிறவுத்துறை அமைச்சகம் கவர்னர் கைலாஷ்நாதனுக்கு பதில் கடிதம்
மத்திய வெளியிறவுத்துறை அமைச்சகம் கவர்னர் கைலாஷ்நாதனுக்கு பதில் கடிதம்
மத்திய வெளியிறவுத்துறை அமைச்சகம் கவர்னர் கைலாஷ்நாதனுக்கு பதில் கடிதம்
ADDED : பிப் 21, 2025 04:36 AM
புதுச்சேரி: காரைக்கால் மீனவர்களை விடுவிக்க கவர்னர் எழுதிய கடிதத்திற்கு, மத்திய வெளியிறவுத்துறை அமைச்சகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
இது குறித்து புதுச்சேரி கவர்னர் செயலக செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மற்றும் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
மீனவர்கள், அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கவர்னர் கைலாஷ்நாதன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை, கவர்னருக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில், அண்மையில் இந்தியா வந்திருந்த இலங்கை அதிபர் அருணா குமார திசநாயகேவிடம், தமிழக-புதுச்சேரி மீனவர்களின் கைது விவகாரத்தை, அவர்களது வாழ்வதாரம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்.
இதுகுறித்து விவாதிக்க இருநாட்டு மீனவர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என, பிரதமர் கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையால் காரைக்காலை சேர்ந்த இரண்டு மீனவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டதையும் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டதையும் அறிந்த கவர்னர், இலங்கையில் உள்ள இந்திய துாதரக அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
காயமடைந்த மீனவர்களின் உடல்நிலை குறித்தும் அவர்களுக்கு அளிக்கும் சிகிச்சை குறித்தும் நேரில் ஆய்வு செய்து விவரம் தெரிவிக்கவும், அவர்களது புகைப்படங்களை அனுப்பி வைக்கவும், அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
மீனவர்களின் நலனைப் பாதுகாக்க மத்திய வெளியுறவுத் துறையும் இலங்கையில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்த கவர்னர் இந்த பிரச்னையை தீர்க்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
விரைவில் இந்த விவகாரம் சுமுகமாக முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.