/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அழகான குளமாக மாறிய கழிவுநீர் குட்டை அம்ரூத் திட்டத்தால் மாயஜாலம்
/
அழகான குளமாக மாறிய கழிவுநீர் குட்டை அம்ரூத் திட்டத்தால் மாயஜாலம்
அழகான குளமாக மாறிய கழிவுநீர் குட்டை அம்ரூத் திட்டத்தால் மாயஜாலம்
அழகான குளமாக மாறிய கழிவுநீர் குட்டை அம்ரூத் திட்டத்தால் மாயஜாலம்
ADDED : பிப் 11, 2024 02:51 AM

லாஸ்பேட்டை போலீஸ் நிலையம் எதிரில், விநாயகர் கோவில் குளம் உள்ளது. குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள இக்குளம் பராமரிப்பு இன்றி கழிவுநீர் குட்டையாக மாறியது. சுற்றிலும் செடி கொடிகள் புதர் போல வளர்ந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ், உழவர்கரை நகராட்சி மூலமாக ரூ. 85 லட்சம் செலவில் குளத்தை மேம்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கியது. 85 லட்சம் லிட்டர் கொள்ளவு தண்ணீரை சேமித்து வைக்கும் பரப்பளவு கொண்ட இக்குளத்தை சுற்றி நடைபாதை, வேலி, இருக்கைகள், குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
மழை காலத்தில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் மழைநீர் குளத்துக்கு சென்று சேரும் வகையில் 3 இடங்களில் வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது மேம்பாட்டு பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உழவர்கரை நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.