தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வரும் 17ம் தேதிக்குள் கூட்டணி முடிவு: பிரேமலதா இறுதி நம்பிக்கை

வரும் 17ம் தேதிக்குள் கூட்டணி முடிவு: பிரேமலதா இறுதி நம்பிக்கை

வரும் 17ம் தேதிக்குள் கூட்டணி முடிவு: பிரேமலதா இறுதி நம்பிக்கை


UPDATED : பிப் 06, 2026 11:25 PM

ADDED : பிப் 06, 2026 08:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 06, 2026 11:25 PM ADDED : பிப் 06, 2026 08:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''தே.மு.தி.க., யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற அறிவிப்பு, 17 ம் தேதிக்குள் முறைப்படி வெளியிடப்படும்'' என, அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.

தே.மு.தி.க., சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம், விருப்ப மனு பெறும் பணி துவங்கியது. கோயம்பேடில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், விருப்ப மனு வினியோகத்தை துவக்கி வைத்து, பிரேமலதா கூறியதாவது:

தே.மு.தி.க., சார்பில் 234 தொகுதிகளிலும், போட்டியிட விரும்பும் கட்சியினரிடம், 12ம் தேதி வரை, விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன. தே.மு.தி.க., கூட்டணியை அறிவிப்பதில், எந்த காலதாமதமும் இல்லை. தே.மு.தி.க., இடம்பெறும் கூட்டணி, இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றியை பெறும். யூகமான கேள்விகளுக்கு, நான் பதில் அளிப்பது கிடையாது.

வரும் 17 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை, இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது. அதற்குள் தே.மு.தி.க., கூட்டணி அறிவிப்பை முறைப்படி வெளியிடுவோம். யாருடன் கூட்டணி பேசுகிறோம் என்பதை சொல்ல முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us