sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருமண விழாவில் நேருக்குநேர் சந்திப்பதை தவிர்த்த ராமதாஸ், அன்புமணி!

/

திருமண விழாவில் நேருக்குநேர் சந்திப்பதை தவிர்த்த ராமதாஸ், அன்புமணி!

திருமண விழாவில் நேருக்குநேர் சந்திப்பதை தவிர்த்த ராமதாஸ், அன்புமணி!

திருமண விழாவில் நேருக்குநேர் சந்திப்பதை தவிர்த்த ராமதாஸ், அன்புமணி!

1


ADDED : பிப் 06, 2026 07:59 PM

Google News

1

ADDED : பிப் 06, 2026 07:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருமண விழாவில் ஒன்றில் ராமதாஸ், அன்புமணி இருவரும் நேருக்குநேர் சந்திப்பதை தவிர்த்தனர்.

செங்கல்பட்டு; திருமண விழாவில் பங்கேற்ற ராமதாஸ், அன்புமணி இருவரும், நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்தனர்.

செங்கல்பட்டு அடுத்த, பழவேலி கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உறவினர் இல்ல திருமண விழா நடந்தது. இதில், ராமதாஸ் பங்கேற்று, திருமணத்தை நடத்தி வைத்தார்.

திருமணம் முடிந்து, ராமதாஸ் புறப்பட்டுச் சென்ற பின், பாமக தலைவர் அன்புமணி, அவரது மனைவி சவுமியா ஆகியோர் வந்தனர். திருமண விழாவில் அவர்கள் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தி விட்டுச் சென்றனர்.

பாமகவில், தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த திருமண விழாவிலும் அவர்கள் இருவரும் சந்திக்கவில்லை.

முன்னதாக, திருமண விழாவுக்கு வந்த ராமதாஸ் அளித்த பேட்டி:

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். நிச்சயமாக, எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும். மாம்பழம் சின்னம் எங்களுக்கு சொந்தமாகும்.

வரும் சட்டசபை தேர்தல் யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக பேச்சு நடைபெறுகிறது. நாங்கள், யாருடன் கூட்டணி அமைப்போம் என்பது குறித்து, விரைவில் நல்ல செய்தி வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us