/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் பயின்று ஐ.சி.ஏ.ஐ., தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி கல்வித்துறை செயலரிடம் வாழ்த்து

ADDED : டிச 31, 2024 05:49 AM

புதுச்சேரி: அரசு பள்ளியில் பயின்று ஐ.சி.ஏ.ஐ., தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி, கல்வித்துறை செயலர் ஜவஹரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புதுச்சேரி, அரசு கல்வித்துறையின் கீழ் இயங்கும் திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2019ம் ஆண்டு கணக்குப்பதிவியல் பிரிவில் பிளஸ் 2 பயின்றவர் மாணவி காவியா. இவர் இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் (ஐ.சி.ஏ.ஐ) நடத்திய இந்திய அளவிலான தேர்வில் தேர்ச்சி பெற்று புதுச்சேரிக்கும், அப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில், பட்டயக் கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவி காவியா கல்வித்துறை செயலர் ஜவஹரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதில், இயக்குனர் பிரியதர்ஷினி, சமக்ர சிக்ஷா திட்ட இயக்குனர் தினகர், பெண் கல்வி துணை இயக்குனர் சிவராமரெட்டி ஆகியோர் உடனிருந்தனர். இதற்கிடையே, தேர்ச்சி பெற்ற மாணவியை கொண்டு திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடுத்த மாதம் திறன் மேம்பாடு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.