/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணல் மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போஸ்டர் காரைக்காலில் திடீர் பரபரப்பு

ADDED : பிப் 13, 2024 05:06 AM

காரைக்கால்: காரைக்காலில் படுதார்கொல்லை சிற்றேரியினை வட்டமிடும் மணல் மாபியாக்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்ககோரி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காரைக்கால் திருமலைராயன்பட்டினம் படுதார்கொல்லை சிற்றேரியினை வட்டமிட்டு வரும் மணல் மாபியாக்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப் பட்டுள்ளது.
அரசால் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலான ஆழம் தோண்டி படுதார்கொல்லை சிற்றேரியில் மணல் அள்ளப்பட்டதை ஆட்சேபித்து தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐக்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்குதற்கும் வறட்சி காலத்தில் விளை நிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கும் உருவாக்கப்பட்ட மேற்படி சிற்றேரியின் நோக்கங்களை புதுச்சேரி அரசு சீர் குலைக்கக்கூடாது.
சிற்றேரியினை உப்புநீர் ஏரியாக மாறி, திருப்பட்டினம் பாலைவனமாக மாறுவதற்கு முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாய சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.