/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மரக்கட்டை ஏற்றி சென்ற லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து
/
மரக்கட்டை ஏற்றி சென்ற லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து
மரக்கட்டை ஏற்றி சென்ற லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து
மரக்கட்டை ஏற்றி சென்ற லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து
ADDED : அக் 06, 2025 01:39 AM

பாகூர்: தவளக்குப்பம் அருகே மரக் கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி,சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
தஞ்சாவூரிலிருந்து நேற்று அதிகாலை மரக் கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஆந்திரா மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.அதிகாலை 5:30 மணியளவில், புதுச்சேரி - கடலுார் சாலை தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் சந்திப்பு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியன் மீது மோதியது.
இதனால், லாரியின் முன்பக்க சக்கரம் அச்சு உடைந்து தனியாக ஓடியது. லாரியில் இருந்த மரக்கட்டைகள் சாலையில் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த விபத்தில், லாரி டிரைவர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கிய லாரி மற்றும் சாலையில் கிடந்த மரக் கட்டைகளை ஜெ.சி.பி., மற்றும் கிரேன் மூலம் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, லாரி விபத்துக்குள்ளான வீடியோ காட்சி, சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.