நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: பெஞ்சல் புயல் தொடர் கன மழையால், கடலுார் சாலையில் உள்ள நோணாங்குப்பம் சங்கராபரணி ஆறு, கடலுார் பெண்ணை ஆற்றில், காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தவளக்குப்பம் அடுத்து புதுக்குப்பம் கடற்கரையில் நேற்று காலை 50 வயது மதிக்கதக்க ஆண் உடல் அழுகிய நிலையில், ஒதுங்கியது. இறந்தவர், யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை. இறந்த நபர், ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இறந்தாரா என, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.