/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஷேர் ஆட்டோ ஓடும்போது சக்கரம் கழன்றதால் பரபரப்பு
/
ஷேர் ஆட்டோ ஓடும்போது சக்கரம் கழன்றதால் பரபரப்பு
ADDED : அக் 08, 2024 03:12 AM

பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே ஓடும்போது ஷேர் ஆட்டோ சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுாரில் இருந்து நேற்று மதியம் 1 மணியளவில், ேஷர் ஆட்டோ ஒன்று ரெட்டிச்சாவடி நோக்கி சென்றது. அதில், 6 பயணிகள் இருந்தனர். வார்க்கால்ஓடை சந்திப்பு அருகே சென்றபோது, ேஷர் ஆட்டோவின் பின் சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் தாறுமாறாக ஓடியது. அதில், பயணம் செய்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர்.
டிரைவர் பிரேக் போட்டு கட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பாக ஆட்டோவை நிறுத்தினார். இதையடுத்து, அதிலிருந்த பயணிகள் இறங்கி ஓடினர். போக்குவத்து மிகுந்த சாலையில், ேஷர் ஆட்டோவின் சக்கரம் கழன்று சாலையில் ஓடி விபத்தில் சிக்கிய சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.