தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வங்கிகள் வழங்கிய கடன்களுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

 வங்கிகள் வழங்கிய கடன்களுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

 வங்கிகள் வழங்கிய கடன்களுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்


ADDED : ஜூலை 09, 2026 03:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 03:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வங்கிகள் வழங்கிய கடன்கள் மற்றும் நடவடிக்கை, விதிமீறல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய வங்கிகள் மற்றும் வங்கி சாரா வாடிக்கையாளர்கள் நலன் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் நடராஜன், முதல்வர் ரங்கசாமிக்கு அனுப்பி உள்ள மனு விபரம்:

புதுச்சேரியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளன. பல தொழில்கள் கடன் பிரச்னையால் மூடப்பட்டு ள்ளன. ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள் மற்றும் மத்திய அரசின் பாதுகாப்பு நடைமுறைகள் பல இடங்களில் முழுமையாக பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

ஆர்.பி.ஐ., வழிகாட்டுதல்களை மீறி சட்டத்தின் தவறான பயன்பாடு, சொத்துக்களின் மதிப்பீ ட்டில் வெளிப்படைத் தன்மை இல்லாமை, தொழில்களை மீட்டெடுக்கும் வாய்ப்பு வழங்கப்படாமை, சிறு தொழில் முனைவோர் மன உளைச்சல் என சங்கத்திற்கு புகார் வந்துள்ளன .

வங்கிகள் வழங்கிய கடன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us