/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆன்லைன் லாட்டரியில் பரிசு விழுந்ததாக பாகூர் பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி
/
ஆன்லைன் லாட்டரியில் பரிசு விழுந்ததாக பாகூர் பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி
ஆன்லைன் லாட்டரியில் பரிசு விழுந்ததாக பாகூர் பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி
ஆன்லைன் லாட்டரியில் பரிசு விழுந்ததாக பாகூர் பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி
ADDED : நவ 26, 2025 07:44 AM
புதுச்சேரி: ஆன்லைன் லாட்டரியில் பரிசு விழுந்துள்ளதாக கூறி பெண்ணிடம் ரூ. 7 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
புதுச்சேரி, பாகூரை சேர்ந்த பெண், பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை பார்த்து, ரூ. 40 கட்டணம் செலுத்தி, கேரளா லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். இதையடுத்து, பெண்ணை தொடர்பு கொண்ட மர்மநபர், கேரளாவில் இருந்து லாட்டரி ஏஜென்ட் பேசுவதாக கூறி, தங்கள் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு ரூ. 5 லட்சம் பரிசு விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், லாட்டரி பரிசு பணத்தை பெற ஜி.எஸ்.டி., மற்றும் டெபாசிட் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதைநம்பிய அப்பெண், மர்மநபருக்கு ரூ. 7 லட்சத்து 3 ஆயிரத்து 899 அனுப்பியுள்ளார். அதன்பின் அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அ தன்பிறகே, சைபர் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 65 ஆயிரம், பிள்ளைச்சாவடியை சேர்ந்தவர் 16 ஆயிரத்து 830, சாரத்தை சேர்ந்தவர் 42 ஆயிரம், தவளக்குப்பத்தை சேர்ந்த பெண் 27 ஆயிரத்து 800, கரியமாணிக்கத்தை சேர்ந்தவர் 35 ஆயிரம் என 6 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 8 லட்சத்து 90 ஆயிரத்து 529 இழந்துள்ளனர்.
இதுகுறித்து புகார்களின் பே ரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

