/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குருவிநத்தம் அரசு பள்ளியில் ஊட்டச்சத்து உணவு திருவிழா
/
குருவிநத்தம் அரசு பள்ளியில் ஊட்டச்சத்து உணவு திருவிழா
குருவிநத்தம் அரசு பள்ளியில் ஊட்டச்சத்து உணவு திருவிழா
குருவிநத்தம் அரசு பள்ளியில் ஊட்டச்சத்து உணவு திருவிழா
ADDED : நவ 26, 2025 07:45 AM

பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஊட்டச்சத்து உணவுத் திருவிழா நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் குமாரராசு வழிகாட்டுதலின் படி நடந்த விழாவில், ஆசிரியை ரேவதி வரவேற்றார். நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். ஆசிரியை அருளரசி நோக்கவுரையாற்றினார்.
ஆசிரியர்கள் கோமளா, சாமுண்டீஸ்வரி, இரிசப்பன், சங்கரதேவி, தேவி, வனிதா, திவ்யா, செந்தில், உடற்கல்வி ஆசிரியர் கமலக்கண்ணன் ஆகியோர், தொடக்கப் பள்ளி மாணவர்கள் கொண்டு வந்த ஊட்டச்சத்து உணவுகளை ஆய்வு செய்து சிறந்த உணவு வகைகளைத் தேர்வு செய்தனர்.
விழாவில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஊட்டச்சத்து உணவு வகைகளைக் காட்சிப்படுத்தினர். ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் குபேரன், சுகந்தி மற்றும் பள்ளி பணியாளர்கள் விழா செய்திருந்தனர். தொடக்கப் பள்ளி ஆசிரியர் வருண் நன்றி கூறினார்.