ADDED : பிப் 06, 2024 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பெண்ணிடம் 41 லட்சம் ரூபாய் ஏமாற்றிய மோசடி கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் கிரிஜா, 53. இவர் பங்கு வர்த்தகம் மற்றும் ஷேர் மார்க்கெட்டில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன், இவரது வாட்ஸ் ஆப்பில் வீட்டிலிருந்து நிறைய சம்பாதிக்கலாம் என வந்த தகவலை நம்பி,பல்வேறு வங்கி கணக்குகளில் 41 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமார்ந்தார். இது குறித்து அவர், அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

