/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வளர் இளம் பருவத்தினருக்கு பயிற்சி பட்டறை
/
வளர் இளம் பருவத்தினருக்கு பயிற்சி பட்டறை
ADDED : செப் 30, 2024 05:33 AM
புதுச்சேரி: வில்லியனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், வளர் இளம் பருவத்தினருக்கான பயிற்சி பட்டறை நடந்தது.
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி பாமகள் வரவேற்றார். நலவழித்துறை துணை இயக்குனர் ஆனந்தலட்சுமி பயிற்சி பட்டறையை துவக்கி வைத்து, பயிற்சி கையேடுகளை வளரிளம் பருவத்தினருக்கு வழங்கி பேசினார். பயிற்சியில் 15 வயது முதல் 19 வயது வரை உள்ள வளர் இளம் பருவத்தினர் கலந்து கொண்டனர்.
பயிற்சி வகுப்பில் சத்துணவு, பாலியல் மற்றும் இனப்பெருக்க நலம், தொற்றா நோய்கள், போதைப் பொருள் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், காயங்கள் மற்றும் வன்முறைகள், பாலின அடிப்படையிலான வன்முறைகள், மனநலம் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர்கள் மரி ரோஸி, மடோனா, விஜயலட்சுமி, ரத்னா, எட்வினா, கார்த்திகா சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் மற்றும் ஆஷா பணியாளர்கள் செய்திருந்தனர்.

