ADDED : பிப் 12, 2026 04:20 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் குடிபோதையில் தென்னை மரம் ஏறி தவறி விழுந்த வாலிபர் இறந்தார்.
காரைக்கால், கோட்டுச்சேரி, குயவன்குளத்து தெருவை சேர்ந்தவர் அந்துவான்; கூலி தொழிலாளி. இவரது மகன் அந்தோணிராஜ், 28; தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் வேலை செய்து வந்தார்.
இவர், மது போதையில், கடந்த 4ம் தேதி தென்கரை ப்பேட்டை சேர்ந்த மதி என்பவரின் வீட்டு தோட்டத்தில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தார். அப்போது தடுமாறி வீட்டின் மொட்டை மாடியில் விழுந்து படு காயமடைந்தார். பு துச்சேரி இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில், கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
