sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 இளம்பெண் எரித்து கொலை பேச மறுத்ததால் வாலிபர் வெறி

/

 இளம்பெண் எரித்து கொலை பேச மறுத்ததால் வாலிபர் வெறி

 இளம்பெண் எரித்து கொலை பேச மறுத்ததால் வாலிபர் வெறி

 இளம்பெண் எரித்து கொலை பேச மறுத்ததால் வாலிபர் வெறி


ADDED : மார் 15, 2026 06:33 AM

Google News

ADDED : மார் 15, 2026 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தனியார் ஜவுளி கடையில் வேலை செய்த இளம்பெண்ணை, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வாலிபர் கைதானார்.

புதுச்சேரி, உப்பளம், நேதாஜி நகரை சேர்ந்தவர் ஷர்மிளா, 28; அண்ணா சாலையில் உள்ள பிரபல ஜவுளி கடையில் வேலை செய்தார். இவருக்கும், கார் டிரைவரான வாணரப்பேட்டையை சேர்ந்த ஜோசப், 38, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜோசப்பின் நடவடிக்கை பிடிக்காததால், அவரிடம் பேசுவதை ஷர்மிளா தவிர்த்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, 9:45 மணிக்கு, பணி முடிந்து கிளம்பிய ஷர்மிளா, அண்ணா சாலை வழியாக, பழைய பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த ஜோசப், ஷர்மிளாவை வழிமறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, ஜோசப், பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை, ஷர்மிளா மீது ஊற்றி தீ வைத்தார். அவர், ஜோசப்பை பிடித்துக்கொண்டு அலறினார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து, பலத்த காயமடைந்த ஷர்மிளாவை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு, அவரிடம் நீதிபதி வாக்கு மூலம் பெற்றார். இந்நிலையில், 80 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஷர்மிளா, நேற்று காலை இறந்தார்.

ஒதியஞ்சாலை போலீசில் ஜோசப் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். தீக்காயமடைந்த ஜோசப்பிற்கு ஜிப்மரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us