/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாலிபருக்கு வெட்டு; இருவருக்கு வலை
/
வாலிபருக்கு வெட்டு; இருவருக்கு வலை
ADDED : நவ 06, 2024 11:28 PM
புதுச்சேரி ; வில்லியனுார் அடுத்த மங்கலம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ஆகாஷ், 23; கொத்தனார். சென்னை வேளச்சேரியில் தங்கி வேலை செய்து வந்தார்.
சமீபத்தில் வீட்டிற்கு வந்த இவர், நேற்று முன்தினம் இரவு அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த அகிலன், ரஞ்சித், கோகுல், நிதிஷ் ஆகியோருடன் வில்லியனுாரில் உள்ள தியேட்டருக்கு நைட் ேஷா பார்க்க சென்றார்.
பின், நள்ளிரவு 1:30 மணியவில் பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். உறுவையாறு நான்கு முனை சந்திப்பு பகுதி அருகே வந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த ஈச்சங்காட்டைச் சேர்ந்த சுரேந்தர், 27, ஏம்பலம் மோகன் 26, ஆகியோர் முன்விரோதம் காரணமாக அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆகாைஷ வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.
அவரது புகாரின் பேரில், சுரேந்தர் உட்பட இருவர் மீது மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.