தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆடி அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்


UPDATED : ஆக 12, 2026 09:36 PM

ADDED : ஆக 12, 2026 09:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2026 09:36 PM ADDED : ஆக 12, 2026 09:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆடி அமாவாசையையொட்டி, புதுச்சேரி கடற்கரையில் ஏராளமானோர் நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

அடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், துன்பங்கள் விலகி, முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதன்படி, நேற்று ஆடி அமாவாசையொட்டி, புதுச்சேரியில் கடற்கரையில் ஏராளமானோர் கடலில் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். மேலும், கடற்கரை காந்தி சிலை அருகில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது.

இதில், மணக்குள விநாயகர் கோவில், காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவில், வரதராஜப்பெருமாள் கோவில், காமாட்சி அம்மன் கோவில், லாஸ்பேட்டை சிவசுப்ரமணியன் கோவில், சாரம் சிவசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்றன.

தர்ப்பணம் கொடுத்தவர்கள் சுவாமிகளை தரிசனம் செய்தனர். அதே போன்று, வில்லியனுார் சங்கராபரணி ஆறு, பாகூர் தென்னைபெண்ணை ஆற்றில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us