ADDED : ஆக 12, 2026 09:12 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆன்லைன் ரேஷன்கார்டு சேவைகள் நிறுத்த வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறையில் ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், ரேஷன் கார்டு தரவுகளை ஸ்மார்ட் பி.டி.எஸ்., அமைப்புக்கு மாற்றும் பணிகள் நடக்கிறது. இதையொட்டி, ரேஷன்கார்டு ஆன்லைன் சேவை அனைத்தும் நேற்று முன்தினம் 11ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் முதல் வாரம் வரை இந்த சேவை நிறுத்தப்படும். தரவு மாற்றம் முடிந்தவுடன் மீண்டும் ஆன்லைன் சேவைகள் தொடங்கப்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
