/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்காஞ்சி கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்
/
திருக்காஞ்சி கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்
ADDED : ஜூலை 28, 2025 01:45 AM

வில்லியனுார்: திருக்காஞ்சி காமாட்சி மீனாட்சி சமேத கெங்கவராக நதீஸ்வரர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நடந்தது.
புதுச்சேரியை அடுத்த திருக்காஞ்சி பகுதியில் பிரசித்தி பெற்ற காமாட்சி மீனாட்சி சமேத கெங்கவராக நதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆடிப்பூர பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் சபாநாயகர் செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் கலந்துகொண்டு வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தேரோட்டத்தில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டு சென்றனர்.
தொடர்ந்து நாளை 29ம் தேதி மாலை 6;00 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.