ADDED : ஆக 27, 2026 07:12 PM
புதுச்சேரி: புதுச்சேரி பிராமண சேவா பவுண்டேஷன், ஆலய அர்ச்சகர், அந்தணர்கள் பாதுகாப்பு சங்கம், ஆர்ய வைஸ்ய ஆன்மீக குழு சார்பில் சமஷ்டி ஆவணி அவிட்டப் பெருவிழாவை முன்னிட்டு 6ம் ஆண்டு சமஷ்டி ரிக், யஜிர் வேத உபாகர்மா மற்றும் ஆவணி அவிட்டம் பூணுால் மாற்றும் வைபவம் நேற்று நடந்தது.
கிருஷ்ணா நகர், சின்மயா சூர்ய மஹாலில் நடந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற அனைவருக்கும் மளிகை பொருட்கள் மற்றும் வஸ்திரம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஆர்ய வைஸ்ய ஆன்மீய குழுவினர்களுடன் புதுச்சேரி பிராமண சேவா பவுண்டேஷன் மற்றும் ஆலய அர்ச்சகர், அந்தணர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ராகவேந்திரன், செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இன்று காலை 5:00 மணி முதல் 7:30 மணி வரை காயத்ரி ஜபம் ஹோமத்துடன் நடக்கிறது. இதில் பங்கேற்றும் அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.
