தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பட்ஜெட்: மின் துறை ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லை சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் குற்றச்சாட்டு  

பட்ஜெட்: மின் துறை ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லை சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் குற்றச்சாட்டு  

பட்ஜெட்: மின் துறை ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லை சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் குற்றச்சாட்டு  


ADDED : ஆக 27, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேர:  கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, மின் துறை ஊழியர்களின் பிரச்னையை அரசின் கவனத்துக்கு எம்.எல்.ஏ.,க்கள் கொண்டு வந்தனர்.

அரசு கொறாடா ஆறுமுகம்: மின் இணைப்பு துண்டிக்கப்படும் போதெல்லாம் இரவு பகல் பாராமல் மின் துறை ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஏதாவது நடந்தால் அவ்வளவு தான். உயிரிழப்பு ஏற்பட்டால் சொல்லவே தேவையில்லை. இவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்த வேண்டும்.

நேரு எம்.எல்.ஏ., : அப்படியே பணி பாதுகாப்பு இருந்தாலும் கூட மின் துறை ஊழியர்களுக்கு உயிர் பாதுகாப்பு இல்லை. விபத்து ஏற்பட்டால் மின் துறை ஊழியர்கள் சொந்த செலவில் தான் செய்கின்றனர். சிகிச்சைக்கு பல லட்சம் செலவு செய்துவிட்டு அந்த குடும்பங்கள் கடனாளியாக மாறிவிடுகின்றன.

அவர்களுக்கான உயிர்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதுபோல் ஏற்கனவே விபத்தில் சிக்கி இருந்து அவர்கள் செலவு செய்துள்ள பணத்தையும் திருப்பி தர வேண்டும்.  

செந்தில்குமார் எம்.எல்.ஏ., : மின் துறை அமைச்சர் ஏற்கனவே இது தொடர்பாக ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளார். அதை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 

கார்த்திகேயன் எம்.எல்.ஏ.,: மரங்களுக்கு இடையே தான் எச்.டி., எல்.டி., லைன்களில் மின் துறை ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். பிரதமரின் ரூ. 5 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டம் போதவில்லை. மின் துறை ஊழியர்கள் மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பாக  தெளிவாக முடிவெடுக்க வேண்டும்.

நேரு எம்.எல்.ஏ., : நம்முடைய காப்பீடு திட்டத்தின் நிதி  போதவில்லை. தமிழகத்தில் காப்பீடு திட்டம் ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோன்று புதுச்சேரியில் காப்பீடு திட்ட தொகை உயர்த்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us