/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அப்துல்கலாம் பிறந்த நாள் கவர்னர், முதல்வர் மரியாதை
/
அப்துல்கலாம் பிறந்த நாள் கவர்னர், முதல்வர் மரியாதை
அப்துல்கலாம் பிறந்த நாள் கவர்னர், முதல்வர் மரியாதை
அப்துல்கலாம் பிறந்த நாள் கவர்னர், முதல்வர் மரியாதை
ADDED : அக் 16, 2024 04:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு கவர்னர், முதல்வர் மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி அரசு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின், 93வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, குறிஞ்சி நகரில் அமைந்துள்ள அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கு வளாகத்தில் உள்ள அப்துல் கலாம் சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அரசு செயலர் ஜவஹர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்த விழாவில் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.