/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
35 செவிலியர் அதிகாரிகளின் சர்வீஸ் பிளேஸ்மென்ட் ரத்து
/
35 செவிலியர் அதிகாரிகளின் சர்வீஸ் பிளேஸ்மென்ட் ரத்து
35 செவிலியர் அதிகாரிகளின் சர்வீஸ் பிளேஸ்மென்ட் ரத்து
35 செவிலியர் அதிகாரிகளின் சர்வீஸ் பிளேஸ்மென்ட் ரத்து
ADDED : அக் 31, 2024 05:48 AM
புதுச்சேரி : சுகாதாரத்துறையில் சர்வீஸ் பிளேஸ்மென்டில் பல்வேறு இடங்களில் பணியாற்றி 35 செவிலியர் அதிகாரிகள், தங்களின் நியமன இடத்திற்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி கல்வித்துறையில் சம்பளம் பெற்றுக் கொண்டு, 54 ஆசிரியர்கள் முதல்வர், அமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றுவது குறித்து கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், கல்விசாரா பணியில் மொத்தம் உள்ள ஆசிரியர்கள் விபரங்களை மனு தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டது.
இதன் எதிரொலியாக சுகாதாரத்துறையில் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களின் சிபாரிசு மூலம் சர்வீஸ் பிளேஸ்மென்டில் வீட்டின் அருகே பணியாற்றி கொண்டிருந்த 35 செவிலியர் அதிகாரிகளின் சர்வீஸ் பிளேஸ்மென்ட் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் தங்களின் பணி இடத்திற்கு திரும்ப சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஆணையை சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரி மேரி ஜோஸ்பின் சித்ரா வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி முழுதும் இதுபோல் மேலும் ஏராளமான செவிலியர் அதிகாரிகள், கிராமப்புற செவிலியர்கள் தங்களின் வீட்டின் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், இ.எஸ்.ஐ., உள்ளிட்டவையில் பணி செய்து கொண்டு உள்ளனர்.
சுகாதாரத்துறையில் 65க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்கள் காலியாக கிடக்கிறது. குறைவான மருந்தாளுநர்கள் மருந்து கொடுக்க முடியாமல் தினசரி சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஆனால், சுகாதாரத்துறை மருந்தாளுநர் சர்வீஸ் பிளேஸ்மென்டில் எம்.பி., அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். ஒட்டுமொத்தமாக சுகாதாரத்துறையில் சர்வீஸ் பிளேஸ்மெண்டில் சென்று பணியாற்றி வருபவர்கள் குறித்து ஆய்வு செய்து, மீண்டும் சுகாதார பணிக்கு திரும்ப அழைக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

