/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரு இடங்களில் விபத்து; இருவர் பலி
/
இரு இடங்களில் விபத்து; இருவர் பலி
ADDED : மார் 12, 2024 05:30 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில் இரு இடங்களில் நடந்த விபத்தில் இருவர் இறந்தனர்.
புதுச்சேரி சவுரிராயலு வீதியைச் சேர்ந்த சிவசங்கரன் மகன் கார்த்திகேயன், 25; சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வந்தார். வீட்டில் இருந்து வேலை செய்து வந்த இவர் கடந்த 9 ம் தேதி இரவு 9:30 மணிக்கு, பைக்கில் மரப்பாலம் சிக்னலில் இருந்து தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நுாறடிச்சாலையில் சென்றார்.
அதே திசையில் வந்த டாரஸ் லாரி பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கார்த்திகேயனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
மற்றொரு விபத்து: முத்தியால்பேட்டை வ.உ.சி. நகர், அன்னி பெசன்ட் வீதியைச் சேர்ந்தவர் கணேசன், 49; இவர் . நேற்று முன்தினம் காலை தனது பைக்கில் ரோமண்ட் ரோலண்ட் நுாலகம் அருகே சென்றபோது, கர்நாடகா மாநில போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மல்லிகா அர்ஜூன் ஓட்டி வந்த கார், பைக் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கணேசனை, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.
இரு விபத்து குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

