/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நோணாங்குப்பம் பாலத்தில் மெகா பள்ளங்களால் விபத்து
/
நோணாங்குப்பம் பாலத்தில் மெகா பள்ளங்களால் விபத்து
ADDED : நவ 06, 2025 05:33 AM

அரியாங்குப்பம்: நோணாங்குப்பம் ஆற்று பாலத்தில் மெகா பள்ளங்கள் ஏற்பட்டு விபத்து நடந்து வருவதால், சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி - கடலுார் முக்கிய சாலையை இணைப்பது நோணாங்குப்பம் ஆற்று பாலமாகும். தினமும் இந்த பாலத்தின் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையில், பாலத்தில் மழைநீர் தேங் கி நின்றது. இதனால், பாலத்தின் பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து, மெகா பள்ளங்கள் உருவாகி உள்ளன.
இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பள்ளங்களில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். சில நேரங்களில் இரவில், பாலத்தில் உள்ள மின் விளக்கு எரியாமல் இருப்பதால், பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்குள், பாலத்தின் சாலையை, பேட்ச் ஒர்க் செய்யாமல், முழுமையாக சீர் அமைப்பதற்கு, பொதுப்பணித்துறையினர், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

